பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்... இணையத்தை கலக்கும் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள். - Yarl Voice பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்... இணையத்தை கலக்கும் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள். - Yarl Voice

பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்... இணையத்தை கலக்கும் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தேசிங்கு பெரியசாமி. கடந்த வருடம் துல்கர் சல்மான், ரித்து வர்மா, இயக்குனர் கௌதம் மேனன், விஜே ரக்ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.  அடிப்படையில் நிரஞ்சனி ஆடை வடிவமைப்பாளர். ’வாயை மூடி பேசவும்’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘பென்சில்’, ‘கதகளி’, ’கபாலி’ உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றியிருக்கிறார். 

அவருக்கு குக் வித் கோமாளி பிரபலம் கனி மற்றும்  நடிகை விஜயலட்சுமி என இரு  சகோதரிகள் உள்ளனர். விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் நடிகை விஜயலட்சுமி தனது தங்கையின் பேச்சுலர் பார்ட்டி கொண்டாட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post