இலங்கையர்கள் எவரும் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பெறுவதற்கு மறுக்கமாட்டார்கள் - சவேந்திரசில்வா - Yarl Voice இலங்கையர்கள் எவரும் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பெறுவதற்கு மறுக்கமாட்டார்கள் - சவேந்திரசில்வா - Yarl Voice

இலங்கையர்கள் எவரும் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பெறுவதற்கு மறுக்கமாட்டார்கள் - சவேந்திரசில்வா
இலங்கையர்கள் எவரும் இராணுவவைத்தியசாலையில் கொரோனா வைரஸ்தடுப்பூசியை பெறுவதற்கு மறுக்கமாட்டார்கள்  என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இராணுவவைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தடுப்புமருந்தினை பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து  கருத்து தெரிவிக்கையிலேயே சவேந்திரசில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் அல்லாதவர்கள் மாத்திரம் இராணுவ வைத்தியசாலையி;ல்  கொரோனா தடுப்பூசியை பெற மறுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைத்து இலங்கையர்களையும் எந்த பாகுபாடுமி;ன்றி நடத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ள இராணுவதளபதி எங்களிற்கு அவர்களது நிலைப்பாடுகள் குறித்து எந்த பிரச்சினையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் நாங்கள் யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள  தமிழ் மக்களை பாதுகாக்கும்  நோக்கத்துடனேயே மருந்துகளை வழங்குகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post