நேர்மைக்கு மகுடம் விருதை வென்ற யாழ்ப்பாண பிரதேச செயலர் முஸ்லிம் மக்களால் கௌரவிப்பு - Yarl Voice நேர்மைக்கு மகுடம் விருதை வென்ற யாழ்ப்பாண பிரதேச செயலர் முஸ்லிம் மக்களால் கௌரவிப்பு - Yarl Voice

நேர்மைக்கு மகுடம் விருதை வென்ற யாழ்ப்பாண பிரதேச செயலர் முஸ்லிம் மக்களால் கௌரவிப்பு
நேர்மைக்கு மகுடம் - 2020 விருதினைப் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன்  இன்று (10) யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களால் கௌரவிக்கப்பட்டார். 

யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மஸ்ஜித் முஹம்மதிய்யாவில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வின் போதே பிரதேச செயலருக்கு அண்மையில் வழங்கப்பட்ட கௌரவமான 'நேர்மைக்கு மகுடம்' விருது பெற்றுக் கொண்டமையை வாழ்த்தும் வகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார். 

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் நிர்வாக உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஜே 86, ஜே 87 கிராம அலுவலர்கள், உலமாக்கள், அரச அலுவலர்கள், ஆசிரியர்கள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி பெற்றோர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், யாழ் முஸ்லிம் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பாக யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினால் விழா நாயகனும் பிரதேச செயலாளருமான சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய சமூக அமைப்புக்களினாலும், வர்த்தகர்களினாலும் மற்றும் சமூக ஆர்வலர்களினாலும்  கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post