வாழ்வகத்தின் வரலாற்றில் மற்றுமோர் சாதனை - யாழ் பல்கலையில் இருவர் பட்டம் பெற்றனர் - Yarl Voice வாழ்வகத்தின் வரலாற்றில் மற்றுமோர் சாதனை - யாழ் பல்கலையில் இருவர் பட்டம் பெற்றனர் - Yarl Voice

வாழ்வகத்தின் வரலாற்றில் மற்றுமோர் சாதனை - யாழ் பல்கலையில் இருவர் பட்டம் பெற்றனர்சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்னும் முகவரியில் இயங்கி வரும் விழிப்புலவலுவிழந்தோர் வாழ்வகமானது கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் கல்வி வரலாற்றில் மிகவும் காத்திரமான பணியாற்றி வரும் ஒரு தொண்டு ஸ்தாபனமென்பது யாவரும் அறிந்ததே. 

வாழ்வக மாணவர்கள் கல்வியில் சிறந்து உயர் பெறுபேறுகள் பெற்று சாதனை புரிந்து வருவதும் யாவரும் அறிந்ததே.

 இவ்வகையில், 2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட  திருமதி. சபேசன் கட்சனி மற்றும், அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 35 வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் முறையே அரசறிவியல், சமூகவியல் துறைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

#

0/Post a Comment/Comments

Previous Post Next Post