நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – உறுபபினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு - Yarl Voice நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – உறுபபினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு - Yarl Voice

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – உறுபபினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

தொழில் அமைச்சினால் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழான உத்தரவு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமையஇ இன்று முற்பகல் 9 மணி முதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ  தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post