தமிழரசின் தலைவருக்கு சிவஞானம் அவசர கடிதம் - Yarl Voice தமிழரசின் தலைவருக்கு சிவஞானம் அவசர கடிதம் - Yarl Voice

தமிழரசின் தலைவருக்கு சிவஞானம் அவசர கடிதம்


தமிழரசின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, பதில் பொதுச்  செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் ஆகியோருக்குு தமிழரசின் மூத்த தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் 

21 2 2021,  நேற்றைய தினம் இடம் பெற்ற பத்துக் கட்சிகளின் கூட்டத்தில் ,தமிழ் தேசிய பரப்பில் உள்ள பத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு  TAMIL NATIONAL COUNCIL,, தமிழ் தேசிய பேரவையாக செயற் படுவது பற்றிய கோரிக்கை  முன் வைக்கப்பட்டது. 

இக்கட்சிகள்  தமது தனித்துவத்தை பேணிக்கொண்டு தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஒருமித்த கருத்தில் செயற்படுவதே இதன் நோக்கம்  .

இது பற்றிய அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் அறிந்து இருபத்தி எட்டாம் திகதி நடைபெற உள்ள கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என முடிவாகியது.

எமது கட்சியை பொறுத்த வரையில் எதிர் வரும் 27.02.2021 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் முடிவு அறியத் தரப்படும் என எம்மால் தெரிவிக்கப் பட்டது.

 எனவே  இதனை மத்திய செயற் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கலாம் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post