பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரனிடம் மீண்டும் பொலிஸார் விசாரணை - Yarl Voice பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரனிடம் மீண்டும் பொலிஸார் விசாரணை - Yarl Voice

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரனிடம் மீண்டும் பொலிஸார் விசாரணைகிளிநொச்சி பொலீசார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கநேஜ்திரன் ஆகியோரிடம் விசாரணை

பொத்துவிலிருந்து பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பாராளமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கநேஜ்திரன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். 

இன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் நடாத்திய தீச்சட்டி ஏந்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது அவ்விடத்தில் வைத்து விசாரணைக்கு வருமாறு பொலீசார் அழைத்திருந்தனர். 

எனினும் பேரணி முடிவில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்திற்கு வருமாறு கூறப்;பட்டது. அதன் பிரகாரம் இல.129, பரவிப்பாஞ்சான் (சமாதான செயலகவீதி) கிளிநொச்சி என்னும் முகவரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டு பாராளுமன்ற உறப்பினர்களிடமும் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post