இந்தியாவில் இந்த ஆண்டில் முதல்முறையாக 60 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - Yarl Voice இந்தியாவில் இந்த ஆண்டில் முதல்முறையாக 60 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - Yarl Voice

இந்தியாவில் இந்த ஆண்டில் முதல்முறையாக 60 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்புஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,949 ஆக உயர்ந்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post