இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு - Yarl Voice இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு - Yarl Voice

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுந்த வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியானது, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளது.

இறுதியில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கையளிப்பதற்கான அறிக்கை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post