இலங்கை ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் இந்திய பிரதமர் - Yarl Voice இலங்கை ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் இந்திய பிரதமர் - Yarl Voice

இலங்கை ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இன்று தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்டார் என இந்திய பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இரு தலைவர்களும் இருதரப்பு பல்தரப்பு அமைப்புகளில் இருநாடுகளிற்கும் இடையில் காணப்படும் உறவுகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

கொரோனாவைரஸ் காரணமாக உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வது உட்பட பலவிடயங்களில் பொருத்தமான அதிகாரிகள் மத்தியிலான தொடர்புகளை பேணுவதற்கும்  இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

அயல்நாடுகளிற்கு முக்கியத்துவம் என்ற இந்தியாவின் கொள்கைக்கு இலங்கை மிகவும் முக்கியமானது என்பதை இந்திய பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post