கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் யாழில் உயிரிழப்பு - Yarl Voice கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் யாழில் உயிரிழப்பு - Yarl Voice

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் யாழில் உயிரிழப்பு



யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 75 வயதான பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பருத்துறை தும்பளை பகுதியில் நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. 

இதனையடுத்து அவருடைய குடும்பத்தவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இவ்வாறு தொற்றுக்குள்ளான நடன ஆசிரியையின் தாயார்

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்கையளிக்கப்பட்டு நேற்றய தினம் வீடு திரும்பியிருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் கண்காணிப்பிற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் 

திடீர் சுகயீனமடைந்திருப்பதாக உறவினர்கள் சுகாதார பரிசோதகருக்கு கூறியிருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக 1990 அம்புலன்ஸ் மூலம் 

பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

இதேவேளை அவருக்கு இன்று மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சிகிச்சை நிலையத்திலிருந்து திரும்பியவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் 

இருக்கவேண்டும். அந்த 2 வாரத்திற்குள் ஏற்பட்டிருக்கும் இறப்பு கொரோனா இறப்பாக கருதப்பட முடியும் என சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். 

ஆனாலும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பே மாகாண சுகாதார அமைச்சு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகின்றது. 

எனினும் கொரோனா மரணமாக கருதப்பட்டு கொவிட் -19 விதிகளுக்கமைய இறுதி சடங்கிற்கான ஒழுங்குகளை சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post