யாழ்ப்பாணத்தை அபிவிருத்தியடைய செய்வார் அங்கஜன் - யாழில் அமைச்சர் கெகலிய தெரிவிப்பு - Yarl Voice யாழ்ப்பாணத்தை அபிவிருத்தியடைய செய்வார் அங்கஜன் - யாழில் அமைச்சர் கெகலிய தெரிவிப்பு - Yarl Voice

யாழ்ப்பாணத்தை அபிவிருத்தியடைய செய்வார் அங்கஜன் - யாழில் அமைச்சர் கெகலிய தெரிவிப்புசனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலில் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் கீழ் அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலக புதிய கட்டடம்  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் யாழ் வருகை தந்த வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளருமான  கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களால்  திறந்துவைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், வடமாகாண உப தபாலதிபர், தாபல் திணைக்கள உத்தியோகத்தர்கள், வடலடுக்கோட்டை மக்கள், ஊடகவியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் .....

ஒரு பிரதேசத்தின் முன்னேற்றம் அந்த பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. அபிவிருத்தி என்ற சொல்லை செயலாக்கும் செயலுருவில் ஈடுபட்டுவருகிறோம். 

ஆனால் இந்த இந்த பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகள்
போராட்டம் என்றால் முதலாவதாக பிரசன்னமாகி குளிர் காய்வதை பிரதான வேலையாக செய்வார்கள். 

இரண்டு தினங்களுக்கு முன்னர் சுகாதார தொணரடர்களால் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தங்கள் அரசியல் லாபத்துக்காக சகாதார தொண்டர்களுக்கான தீர்வை எட்டவிடமல் வருகை தந்த அமைச்சரை கதைக்கவிடாமல் செய்தவர். ஆனாலும் அமைச்சர் மகிந்த அளுத்தகம ஜனதிபதியுடன் கதைத்து சுகாதார தொண்டர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறியிருக்கின்றார்.

 வடமாகாண காணி பத்திரங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்ப்பட்ட போது அரசியல் பிரிதிநிதிகள் ஆர்பாட்டம் மேற்கொண்டனர்.

நான் போரட்டம் செல்லவில்லை.
சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து பொறுப்பு வாய்ந்த மாவட்ட அபிவிருத்திகுழு தலைவர் என்ற வகையில் யாழில் இடம்பெற்று கிராமிய அபிவிருத்தி சம்மந்தமான கூட்டத்தில் கலந்துரையாடி அமைச்சர் மூலம் திரும்ப யாழ் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

அதன் படி நேற்று மாலை 5.30 மணிக்கு காணி ஆவனங்கள் அனைத்தும் கச்சேரிக்கு வந்தது. 30 வருட யுத்தத்தில் பல அபிவிருத்தி இடைவெளியை சந்தித்துள்ளோம். அபிவிருத்தி பாதையூடாகவே எங்கள் பிரதேசத்தை முன்னேற்றகரமான பாதையில் இட்டு செல்வோம்.

அமைச்சர் அவர்களே எமது வடக்கில் உள்ள தபால் துறையை முன்னேற்றகரமான அபிவிருத்தி அடைந்த துறையாக மாற்றுவதற்கு உதவி செய்யவேண்டும் மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்களில் உள்ள தபால் நிலையிங்கள் அமைக்கப்பட வேண்டும் மற்றும் பழைதடைந்த தபால் நிலையங்கள் புனரமைக்கப்படவேண்டும் என தயவாக கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
 
தொடர்ந்து உரையாற்றி அமைச்சர்
தாபல்துறை தேசிய ரீதியிலேயே பாரிய சேவை ஆற்றிவருகிறது.
 
244 வருடங்கள் பழைமையான தபால் துறை மக்களின் தேவை என்பாதால் தாபல் சேவையாக முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகிறது.
2009ம் ஆண்டு காலப்பகுதி வரை பொருளாதார ரீதியான குறைபாடுகள் இந்த பிரதேசத்தில் காணப்பட்டது. 

2010ம் ஆண்டுக்கு பின்னர் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னேடுத்தோம். சுபீட்சத்தின் நோக்கு என்ற அரச கொள்கைக்கு ஏற்ப இன்றைய காலத்திலும் இப் பிரதேசங்களில் முன்னேற்றகரமான அபிவிருத்தி திட்டங்களை முனனேடுத்து வருகிறோம். 


யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரையில் விவசாயம், கல்வி, உயர் கல்வி, சுகாதாரம்  மக்களின் பிரதான தேவை என்பதை உணர்ந்துள்ளோம். இந்த நான்கு விடயங்களும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் தாபல் சேவை சிறப்பாக நடைபெற வேண்டும் அந்த துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு சேவையாகவே தாபல் சேவையை நான் பார்க்கிறேன்.

நான், எமது தபாலதிபர், அமைச்சின் செயலாளர், தபால் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அங்கஜன் இராதநாதனின் ஊடாக வேண்டப்படும் கோரிக்கைகளை கட்டாயம் கவனத்தில் எடுப்போம் என உறுதி கூறுகிறேன்
 
அரசியல் ரீதியாக எங்கள் இணைப்பை உங்கள் தலைவர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டு உங்கள் பிரதேசத்தை அபிவிருந்து பாதையில் இட்டு செல்வார் 
 
அபிவிருத்திக்கு முன்னிலை கொடுக்கும் அரசாங்கம் என்ற வகையில் பெளதீக வளம், மனித வளத்தை  முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி செய்வோம். மேலும் தபால்துறையில் நவீன தொழில்நுட்ப மாற்றங்களை செய்து செயல்படுத்துகிறோம் 
 
அரசாங்கம் அபிவிருத்தியில் புதிய கொள்கையாக கட்டிடங்கள் அமைப்பதை தவிர்த்து வருகிறது. அதை மீறியும் தபால் துறை கட்டியெழுப்பபடவேண்டும் என்ற வகையில் அனுமதி பெற்று கட்டிடங்கள் அமைத்து தருகின்றோம். சிறப்பான பாதையில் பயணிப்போம் என்றார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post