சுமந்திரனிடம் இன்று மீண்டும் பொலிஸார் விசாரணை - பொலிஸாருக்கு அதிகாரமில்லை என சுமந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice சுமந்திரனிடம் இன்று மீண்டும் பொலிஸார் விசாரணை - பொலிஸாருக்கு அதிகாரமில்லை என சுமந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice

சுமந்திரனிடம் இன்று மீண்டும் பொலிஸார் விசாரணை - பொலிஸாருக்கு அதிகாரமில்லை என சுமந்திரன் சுட்டிக்காட்டு
தமிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான என்ன சுமந்திரனிடம் இன்று மீண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான  பேரணியில் கலந்து கொண்டதாக கூறிய போலீசார் வாக்குமூலம் பெற முற்பட்டபோது தனக்கு எந்தவித தடைகளும் இல்லை என்றும் அதனால் வாக்குமூலம் பெரும் அதிகாரம் போலீசாருக்கு கிடையாது என்றும்  சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஆயினும் போலீசார் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியிருந்தால் அதற்காக தான் வாக்குமூலம் அளிப்பதாக குறிப்பிட்டு வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது...

களுவாஞ்சிகுடி பொலிசார் தற்போது P2P இல் நான் கலந்து கொண்டது சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் பொண்டார்கள். 

எனக்கெதிராக எந்தவொரு முறைப்பாடும் இல்லாத பின்னணியிலும் எந்த நீதிமன்ற உத்தரவொன்றும் இதில் நான் கலந்து கொள்வதை தடுத்திராத பின்னணியிலும் எனது வாக்குமூலத்தை பெறுவதற்கு பொலிசாருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை பதிவு செய்து விட்டு, அவர்கள் செய்கிற “விசாரணைக்கு” உதவியாக வேண்டுமானால் வாக்குமூலம் தரலாம் என்று சொல்லி கொடுத்திருக்கிறேன்! 0/Post a Comment/Comments

Previous Post Next Post