மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் -சுமந்திரன் நம்பிக்கை - Yarl Voice மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் -சுமந்திரன் நம்பிக்கை - Yarl Voice

மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் -சுமந்திரன் நம்பிக்கை
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என  தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். 

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா  இல்லையா என்பது முற்றும் முழுதாக இந்தியாவை பொறுத்தவிடயம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது என தெரிவித்துள்ளார். 

மனித உரிமை  பேரவையின் அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தியா தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து தெரிவித்தமை காரணமாக  இம்முறை நாம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post