இலங்கை நிகாப்பினை தடை செய்ய தீர்மானித்தால் இலங்கையின் முஸ்லீம்கள் பாதிக்கப்படுவார்கள் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் சாட் கட்டாக் டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.
நிகாப் தடை செய்யப்பட்டால் அது இலங்கை முஸ்லீம்களையும் உலக நாடுகளின் முஸ்லீம்களையும் உணர்வு ரீதியாக காயப்படுத்தக்கூடும் என அவர்தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களிற்காக இவ்வாறான பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது இலங்கையில் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் குறித்த பரந்துபட்ட அச்சங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment