நிலாவரையில் தொல்பொருள் திணைக்களம் அத்துமீறி மீண்டும் அகழ்வு பணி - மக்கள் கடும் எதிர்ப்பு - Yarl Voice நிலாவரையில் தொல்பொருள் திணைக்களம் அத்துமீறி மீண்டும் அகழ்வு பணி - மக்கள் கடும் எதிர்ப்பு - Yarl Voice

நிலாவரையில் தொல்பொருள் திணைக்களம் அத்துமீறி மீண்டும் அகழ்வு பணி - மக்கள் கடும் எதிர்ப்பு
புத்தூர் நிலாவரைக் கிணறு பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால குறித்த பகுதியில் பதட்டமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்கனவே அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் கடும் எதிர்ப்பினால் இடை நிறுத்தப்பட்டிருந்தது

இந் நிலையில் இன்றைய தினம் மீண்டும் அத்துமீறி நுழைந்து அகழ்வுப் பணியில் தொல் பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post