உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதார தொண்டர்களை சந்தித்த சித்தார்த்தன் - Yarl Voice உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதார தொண்டர்களை சந்தித்த சித்தார்த்தன் - Yarl Voice

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதார தொண்டர்களை சந்தித்த சித்தார்த்தன்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுகாதார தொண்டர்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆளுநர்கள் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்த சுகாதார தொண்டர்களுக்கு ஆளுநரினால் உரிய பதில் கிடைக்காத நிலையில் நேற்று முதல் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதார தொண்டர்களை பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் , வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் கு.தர்ஷன், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர் ஆகியோரும் சென்றிருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post