கொஹூவல பகுதியில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகர் – பொலிஸார் தெரிவித்துள்ள மேலதிக தகவல்கள் என்ன? - Yarl Voice கொஹூவல பகுதியில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகர் – பொலிஸார் தெரிவித்துள்ள மேலதிக தகவல்கள் என்ன? - Yarl Voice

கொஹூவல பகுதியில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகர் – பொலிஸார் தெரிவித்துள்ள மேலதிக தகவல்கள் என்ன?கொஹூவல பகுதியில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகர் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் தனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் என  தெரிவித்துள்ள பொலிஸார்  மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாரிய சத்தமொன்றை கேட்டதாகவும் வெளியில் வந்து பார்த்தவேளை கார் எரிந்துகொண்டிருந்ததாகவும் தங்களால் தீயைகட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் முற்றிலும் எரிந்த நிலையில் வாகனத்தையும் அதற்குள் உடல் ஒன்றையும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எரியுண்ட காருக்குள் காணப்பட்ட உடல் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் 32 வயது வர்த்தகரான நிசார் முகமட் சக்சானுடையது என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு உணவை பெறுவதற்காக சென்ற அவர் தனது உறவினரின் வர்த்தகநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தார் என்பது ஆரம்பகட்ட  விசாரணைகளின தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழப்பதற்கு ஏழு நிமிடங்களிற்கு முன்னர் பாணந்துறையில் உள்ள  மனைவியுடன் உயிரிழந்த நபர் உரையாடியுள்ளார், திருமண நிகழ்விற்காக கேக்கினை வாங்குவது குறி;;த்து இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு நபரிடமிருந்து கேக்கினை பெறுவதற்காகவே அவர் கொஹ_வலைக்கு சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காருக்குள்  உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபரின் மனைவி உட்பட பலரிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளோம் சிசிடிவி கமராக்களை ஆராய்ந்து வருகின்றோம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post