யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட 43 ஆவது அணி புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வும், கற்கை நெறி ஆரம்ப நிகழ்வும் இன்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரவிராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், நூலகர் திருமதி எஸ். கல்பனா, சத்திர சிகிச்சைத் துறைத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் துரைசாமி சர்மா, பல்கலைக் கழக கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவரும், சமுதாய மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியக் கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மருத்துவபீடாதிபதி மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் புதுமுக மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இன்று மருத்துவ பீடத்தில் கற்கை நெறியை ஆரம்பிக்கும் புதுமுக மாணவர்கள் அனைவரும் இம்மாத முற்பகுதியில் மாணவர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, கடந்த வாரம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே வகுப்புக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment