பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச்செய்தது பிரிட்டன் நீதிமன்றம் - Yarl Voice பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச்செய்தது பிரிட்டன் நீதிமன்றம் - Yarl Voice

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச்செய்தது பிரிட்டன் நீதிமன்றம்
மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பிரிட்டனின் உயர்நீதிமன்றம் இரத்துசெய்துள்ளது.

பிரியங்க பெர்ணான்டோ வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தனக்கு எதிராக வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான தீர்ப்பை இரத்துசெய்துள்ளது.

இந்த வழக்கிற்கான செலவினை 2018 பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்கவேண்டும் எனநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் பிரியங்கபெர்ணான்டோவின் தரப்பினர் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இராஜதந்திர விடுபாட்டுரிமை குறித்து இராஜதந்திர உறவுகள் குறித்த 1961 வியன்னா பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை உறுதி செய்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post