முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் மரணம் - Yarl Voice முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் மரணம் - Yarl Voice

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் மரணம்முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் அண்ணன்
 APJ முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 104.


ஆவுல் பக்கீர்  ஜெய்னுல்லாபுதின் என்பவருக்கு   1917ம் வருடம் நவம்பர் 5ல் பிறந்தவர் APJ முத்து மீரான் லெப்பை மரைக்காயர். 104 வயதான இவர் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.,  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்    ராமேஸ்வரம் வரும் போதெல்லாம் அவரின் வீட்டிற்கு சென்று  அண்ணனை பார்த்து செல்வார்.,  இந்த நிலையில் கலாமின் மறைவிற்கு பின் ராமேஸ்வரம் வரும்  சுற்றுலாபயணிகளும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலாமின் அண்ணனை மரியாதை நிமிர்த்தமாக பார்த்து புகைப்படம் எடுப்பது வழக்கமாகிருந்தனர்., இந்த நிலையில்  வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே  வசித்து வந்த இவர் தற்போது மரணமடைந்துள்ளார்.,  அவரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.

ஆவுல் பக்கீர்  ஜெய்னுல்லாபுதின் என்பவருக்கு  4 ஆண்களும், ஒரு பெண்ணும் என மொத்தம் 5 பேர்  இதில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்  குடும்பத்தில் கடைசி பையனும் மரணமடைந்த முத்து மீரான் மரைக்காயர்  குடும்பத்தில் இரண்டாவது பையன் என்பது குறிப்பிடதக்கதது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post