வடக்கில் செய்தி சேகரித்ததை தொடர்ந்து தன்னை சிலர் பின்தொடர்வதாக பிபிசி ஊடகவியலாளர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு - Yarl Voice வடக்கில் செய்தி சேகரித்ததை தொடர்ந்து தன்னை சிலர் பின்தொடர்வதாக பிபிசி ஊடகவியலாளர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு - Yarl Voice

வடக்கில் செய்தி சேகரித்ததை தொடர்ந்து தன்னை சிலர் பின்தொடர்வதாக பிபிசி ஊடகவியலாளர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு
நீதி கோரி வடக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பில் செய்தி சேகரித்ததை தொடர்ந்து தன்னை சிலர் பின்தொடர்வதாகவும், தன்னைப்பற்றிய தகவல்களை திரட்டுவதாகவும் தெரிவித்து பிபிசி ஊடகவியலாளர் ரஞ்சன் அருண் பிரசாத் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் ரஞ்சன் அருண் பிரசாத் மேலும் கூறுகையில் எனது சொந்த இடத்திற்கு சென்று தன்னைப்பற்றி விசாரித்துள்ளதாகவும், தான் அது தொடர்பிலேயே பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டதாக குறிப்பிட்டார். 

விசாரிக்க வேண்டி இருந்தால் தன்னை நேரடியாக விசாரிக்குமாறும் விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், ஆனால் எனது சொந்தக் கிராமத்திற்கு சென்று இது தொடர்பில் விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post