ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகபணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜலாலாபாத்தில் பணிமுடிந்து திரும்பிக்கெண்டிருந்த இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வெவ்வேறு துப்பாக்கி பிரயோகங்களில் அவர்கள் கொல்லப்பட்டனர் என எனிகாஸ் தொலைக்காட்சியின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர் அவர்கள் வேலையிலிருந்து வீட்டிற்கு நடந்துசென்றுகொண்டிருந்தவேளை அவர்கள் சுடப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சமீபத்திலேயே பாடசாலை உயர் கல்வியை முடித்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் தப்பிச்செல்ல முயன்றவேளை நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் தான் தாக்குதலை மேற்கொண்டுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார் அவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி இந்திய நாடகங்களை ஆப்கான் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதில் பங்களிப்பு செய்துவந்தவர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment