எதிர்கட்சியினர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- ஜனாதிபதி - Yarl Voice எதிர்கட்சியினர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- ஜனாதிபதி - Yarl Voice

எதிர்கட்சியினர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- ஜனாதிபதிஎதிர்கட்சியினர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
 என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹிக்கடுவையில் இன்று உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ச பசில் ராஜபக்ச அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலுக்கான காரணம் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  ஒருவர் தெரிவித்திருந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஏதாவது விபரங்கள் இருந்தால் சிஐடியினரை அவரிடமிருந்து அந்த விபரங்களை பெறுமாறு நான் கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ள  ஜனாதிபதி விபரங்களை மறைப்பது குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிஐடியினர் அவரை விசாரணை செய்தவேளை அவர் தன்னால்  எதனையும் நினைவுபடுத்திபார்க்க முடியவி;ல்லை தான் அவ்வாறு தெரிவித்தது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினர் மக்களுக்கு வழங்கும் தகவல்கள் இவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினர் எப்போதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது அரசியல்மயப்படுத்தக்கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி இது தேசிய பிரச்சினை என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post