வடக்கு காணிப் பிரச்சனை தொடர்பில் தேசிய காணி ஆணையாளரை சந்திக்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் - Yarl Voice வடக்கு காணிப் பிரச்சனை தொடர்பில் தேசிய காணி ஆணையாளரை சந்திக்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் - Yarl Voice

வடக்கு காணிப் பிரச்சனை தொடர்பில் தேசிய காணி ஆணையாளரை சந்திக்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்




வடக்கு மாகாணத்தில் உள்ள காணி பிரச்சனைகள் தொடர்பில் நாளைய தினம் தேசிய காணி ஆணையாளருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே என்.இன்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

அந்த வகையில் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காணி விடயங்கள் தொடர்பாகவும்,  மக்களுடைய நிலைமைகள் தொடர்பாகவும் பொது அமைப்புக்கள் மற்றும் வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதி மக்களுடன் ஆராயப்பட்டது.

தேசிய காணி ஆணையாளருடன் காணி விடயங்கள் தொடர்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்தோம். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை பல்வேறுபட்ட காணிபிரச்சினைகள் காணப்படுகின்றன.

நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ முகாம்கள் மற்றும் ஏனைய முப் படையினருக்கு தேவையான காணி அபகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய தினம் நாளை பேசப்பட வேண்டிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம் தேசிய ஆணையாளருடன் இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் நாளை பேச உள்ளோம் எனவும் தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post