இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் - இந்திய விமானப்படை தளபதி நம்பிக்கை - Yarl Voice இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் - இந்திய விமானப்படை தளபதி நம்பிக்கை - Yarl Voice

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் - இந்திய விமானப்படை தளபதி நம்பிக்கைஇலங்கையுடனான தனது பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் தளபதி ராகேஸ் குமார் சிங் பதவ்ரியா இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிற்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தேசிய அளவிலும் பாதுகாப்பு அளவிலும்  மிகவும் நெருக்கமானவை எனவும் இந்திய இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post