கிருபாகரன் மெரினா அவர்களின் ”அன்பின் ஒளிவெள்ளம்” இசைத்தட்டு வெளியீடு - Yarl Voice கிருபாகரன் மெரினா அவர்களின் ”அன்பின் ஒளிவெள்ளம்” இசைத்தட்டு வெளியீடு - Yarl Voice

கிருபாகரன் மெரினா அவர்களின் ”அன்பின் ஒளிவெள்ளம்” இசைத்தட்டு வெளியீடு
திருமதி கிருபாகரன் மெரினா அவர்களின் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் செயல்வீரன் அவர்களின் இசையிலும் மலையவன் அவர்களின் ஒலிப்பதிவிலும் உருவான ”அன்பின் ஒளிவெள்ளம்” இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டகத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வினை கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்விற்கு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் மதிப்பிற்குரிய யோசெப்தாஸ் ஜெயரட்ணம் ஆண்டகை அவர்கள், மதிப்புறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னைநாள் மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், ஆண்டிஐயா புவனேஸ்வரன், மருத்துவர்கள், கலைஞர்கள் உட்பட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

”அன்பின் ஒளிவெள்ளம்” இசைத்தட்டில் வேலணையூர் சுரேஸ், கு.வீரா, செயல்வீரன், ஸ்ரீவிஜய் ஆகியோர் எழுதி சாந்தன், சிவா, திருமாறன், தர்சினி, அருள் தந்தை ரெனோல்ட் ஜோச், இசைப்பறவை கரோலின், யுவராஜ், கி. மெரீனா ஆகியோர் பாடிய எட்டுப்பாடல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post