அதிகரிக்கும் கொரோனா பரவலால் யாழ் நகர மத்திய பகுதியை முடக்க தீர்மானம் - Yarl Voice அதிகரிக்கும் கொரோனா பரவலால் யாழ் நகர மத்திய பகுதியை முடக்க தீர்மானம் - Yarl Voice

அதிகரிக்கும் கொரோனா பரவலால் யாழ் நகர மத்திய பகுதியை முடக்க தீர்மானம்
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்குவதற்கு இன்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இன்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே குறித்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்களாவன...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும்.  கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.

யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன. வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.

உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர். 

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post