புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதவி - Yarl Voice புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதவி - Yarl Voice

புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உதவிவலிகாமம் கிழக்குப் பகுதியில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 31 மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் தேவையை ஊக்குவிக்கும் முகமாக கோப்பாய் பிரதேச தேசோதய சபையின் ஏற்பாட்டில் RB ( Management consultancy global) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் பொருள்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்கள் பெயரில் வங்கிக் கணக்கும் திறக்கப்பட்டு  தலா 2000 ரூபாய் பணமும் வைப்பிலிடப்பட்டது.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு யாழ்.இணுவில் மகப்பேற்று வைத்தியசாலையால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதுடன், தேசோதைய சபையினால் உலர் உணவுப் பொதி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) பிற்பகல் 3 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக உதவிச் செயலர் தலைமையில், கோப்பாய் பிரதேச தேசோதைய சபையின் தலைவர் மயில்வாகனத்தின் நிகழ்வு ஒழுங்கமைப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கே பொருள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வில் தேசோதைய சபை, RP நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள்,  கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post