தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் தொடர்பில் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய மாநகர முதல்வர் - Yarl Voice தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் தொடர்பில் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய மாநகர முதல்வர் - Yarl Voice

தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் தொடர்பில் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய மாநகர முதல்வர் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் மாநகர முதல்வரால், இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் நில ஆக்கிரமிப்புகள், கடந்த காலங்களில் தரப்படுத்தல் ரீதியாக தமிழ் மாணவர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள், தமிழ் மக்களின் ஜனநாயக வழி உரிமைப் போராட்டத்தினை நசுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், 
எதிர்கால யாழ் மாநகர அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post