அரசாங்க வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம் - உயர் பாதுகாப்பு வலயத்தில் காணி, வீடுகளை இழந்த குடும்பம் புறக்கணிப்பு - Yarl Voice அரசாங்க வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம் - உயர் பாதுகாப்பு வலயத்தில் காணி, வீடுகளை இழந்த குடும்பம் புறக்கணிப்பு - Yarl Voice

அரசாங்க வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம் - உயர் பாதுகாப்பு வலயத்தில் காணி, வீடுகளை இழந்த குடும்பம் புறக்கணிப்புதற்போதய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அரச வீட்டுத் திட்டங்களுக்கான தெரிவில் 30 வருட காலமாக தமது சொந்த காணி வீடுகளை இழந்து குடும்பம் கோப்பாய் பிரதேச செயலகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன வீட்டு திட்டங்களுக்கான தெரிவுகள் இடம்பெற்றுவரும் நிலையில் வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யக் கூடிய பொதுவான  காரணிகள் சாதகமாக இருக்கின்ற நிலையில் குறித்த குடும்பத்தை கேட்பாய் பிரதேச செயலகம்  புறக்கணித்த நிலைமை காணப்படுகிறது.

வலி வடக்கு பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள குறித்த குடும்பத்தின் வாழ்விடம் விடுவிக்கப்படாத சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளது.

இன் நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் தனக்கான வீட்டுத் திட்டத்தை கோரி 2019ஆம் ஆண்டு காணி கொள்வனவு செய்து வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் ஆறு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் பல்வேறு சிரமங்கள் மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் தனக்கான ஒரு வீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குறித்த குடும்பம் அதிகாரிகளின் அலுவலகங்களை நாடியது.

இதன் பயனாக தற்போது வீட்டுத்திட்ட தெருவில் குறித்த குடும்பத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ள போதும் கோப்பாய் பிரதேச செயலகத்தால் தயாரிக்கப்பட்ட இறுதி பட்டியலில் குறித்த குடும்பத்தின் பெயர் நீக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கிராமத்துக்கும் பொறுப்பான துறை சார்ந்த அதிகாரியை  அதிகாரியை தொடர்பு கொண்டபோது குறித்த குடும்பம் தான் கொள்வனவு செய்த காணியில் தற்காலிக வீடு அமைத்து  குடி அமராததால் தமது மேலதிகாரிகளின் பரிந்துரையில் நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் குறித்த குடும்பம் வீட்டுத் திட்டத்தை எதிர்பார்த்து அருகில் ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ள நிலையில் வீடு கட்டுவதற்காக தங்களால் முடிந்த மணல் ,கல் என்பவற்றை அதற்கான காணியில் ஏற்கனவே தயார்படுத்தி வைத்துள்ளது.

தற்காலிக கொட்டகை அமைத்தவர்களுக்கு மட்டும்தான் வீட்டுத்திட்டம் என்றால் 6 பேர் கொண்ட குடும்பம் தமக்கான தற்காலிக வீட்டை அமைப்பதற்கு சுமார் 5 லட்சம் ரூபாக்கு குறையாமல் தேவைப்படும்.

இவ்வாறான நடைமுறை அமைச்சு மட்டத்தில் வழங்கப்படுகிறதா? என ஆராய்ந்த போது திட்டத்துக்காக  தெரிவு செய்யப்பட்டவர் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடிய தயார்படுத்தலில் இருந்தால் அவரை சிபாரிசு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாற நடைமுறைகளால் நல்லாட்சி அரசாங்க காலத்தி பல குடும்பங்கள் தமது தற்காலிக வீட்டை பிடுங்கி நிரந்தர வீட்டுத் திட்டத்தை அமைக்கும்போது   முழுமையான நிதி கிடைக்காததால் தற்போது நிர்க்கதியாகி நிற்கின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் அரச சுற்றுநிருபங்களை தாண்டி மக்களின் தேவைகளை அறிந்து கடமையைச் செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை தொடர்பு கொண்டபோது வீட்டுத் திட்டம் தொடர்பான
 பல முறைப்பாடுகள் தனக்கு கிடைப்பதாகவும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post