அஸ்டிராஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்;தின சில உலக நாடுகள்- அச்சமடையவேண்டிய அவசியமில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு - Yarl Voice அஸ்டிராஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்;தின சில உலக நாடுகள்- அச்சமடையவேண்டிய அவசியமில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு - Yarl Voice

அஸ்டிராஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்;தின சில உலக நாடுகள்- அச்சமடையவேண்டிய அவசியமில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு
அஸ்டிரா ஜெனேகாவின் தடுப்பூசியை  பயன்படுத்துவதை சில உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் ஆனால் தடுப்பூசியை பயன்படுத்தாமல் விடுவதற்கான காரணங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

டென்மார்க் நோர்வே ஜஸ்லாந்து ஆகிய நாடுகளின் சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.

தடுப்பூசியை பெற்ற சிலர் குருதிஉறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்ந்தே இந்த நாடுகள்  தடுப்பூசியை தடை செய்துள்ளன.

இதேவேளை இந்த விடயம் குறி;த்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் ஆலோசனை குழுவின் பேச்சாளர் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி மிகச்சிறந்தது என தெரிவித்துள்ளார்.

மருந்தி;ற்கும் வெளியாகியுள்ள சுகாதார பிரச்சினைக்கும் எந்த தொடர்புமிருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அஸ்டிராஜெனேகா தடுப்புமருந்தினை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகநாடுகளில் இருந்து கிடைத்துள்ள அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்டிராஜெனேகாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து  அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிகாரிகள்  கரிசனை எதனையும் வெளியிடவில்லை என பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

அஸ்டிரா ஜெனோகா தடுப்பூசியை பயன்படுத்தியவர்கள் சிலர் குருதிஉறைவினால் பாதிக்கப்பட்டு;ள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசியை பயன்படுத்துவதை  இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே ஸ்கொட்மொறிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதார திணைக்களத்தின் செயலாளர் பிரென்டன் மேர்பியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளததாக தெரிவித்துள்ள பிரதமர் அவுஸ்திரேலியாவில் அஸ்டிரா ஜெனேகாவை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் இடம்பெறும் விடயங்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள்  தொடர்ந்து கண்காணிப்பார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post