அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது லண்டனில் பொலிஸார் தாக்குதல்- - Yarl Voice அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது லண்டனில் பொலிஸார் தாக்குதல்- - Yarl Voice

அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது லண்டனில் பொலிஸார் தாக்குதல்-
இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட தமிழர்களின் நீதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரிற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு முயன்ற காவல்துறையினர் தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிலரை கைதுசெய்துள்ளனர்.

லண்டனின் வடமேற்கில் உள்ள கென்டனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை அங்கிருந்துஅகற்றுவதற்கு காவல்துறையினர் முயன்றுள்ளனர்.

காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டனர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post