வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு இராணுவம் உதவும் - யாழ் இராணுவ தளபதி - Yarl Voice வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு இராணுவம் உதவும் - யாழ் இராணுவ தளபதி - Yarl Voice

வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு இராணுவம் உதவும் - யாழ் இராணுவ தளபதி



மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக வடக்கு மக்களை முன்னேற்ற ராணுவம் உதவுமென யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ராணுவத்தினரால் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்


இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகம் பகுதியில் வருமானம் குறைந்த குடும்பங்கள் மற்றும் குழந்தை பெற இருக்கும் தாய்மார்களுக்கு மகளிர் தினமான மார்ச் 8 ம்  திகதியை முன்னிட்டு ராணுவத்தினரால் உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவீந்திர சில்வாவின்  வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தினரால் வருமானம் குறைந்து தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது 


பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள   மக்களுக்கு போசாக்கு  உணவு பொதிகள் அத்தோடு குழந்தை பெறவுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த உணவுப் பொருட்களை வழங்குவதில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி என்ற ரீதியில்  மகிழ்ச்சி அடைகிறேம்


 இந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு உதவிய அனைத்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையணி தளபதிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது  இலங்கை ராணுவத்தின் முக்கிய நோக்கமாகும்.

 அதேபோலவே  யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தலைமையகம் யாழ்ப்பாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக வடக்கு மக்களை முன்னேற்றுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும்  முன்னெடுக்க தயாராக உள்ளது

 அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய பாதுகாப்பு மட்டுமல்லாது விவசாயம் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை இராணுவத்தினர் முன்னெடுக்கும் நிலையில் 

  இங்கு உள்ள படித்த முதியவர்களின் ஆலோசனைகளை பெற்று  ராணுவத்தினராகிய நாங்கள் பல்வேறுபட்ட உதவிகளை பொதுமக்களுக்கு மேற்கொள்வதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post