உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் முன்னைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாகவே 2019 இல் மீண்டும் குண்டுகள் வெடித்தன என குறிப்பிட்டுள்ளார்.
2019 செப்டம்பரில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு யார் குற்றவாளி என்பதை தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் எனக்கு அறிக்கை கிடைத்தது, பாதுகாப்பு விவகாரங்களில் முன்னைய அரசாங்கம் போதிய அக்கறையி;ன்றி காணப்பட்டமையும்,திறமையின்மையுமே முக்கியமான இரு காரணங்கள் என ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தாக்குதலிற்கு பொறுப்பேற்கவேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது நல்லாட்சி அரசாங்கத்தின்ஒரு பகுதியாகயிருந்தவர்கள் தாங்கள் தற்போது அவ்வாறுயிருக்கவி;ல்லை என தெரிவிக்க முயல்கின்றனர்என தெரிவித்துள்ள ஜனாதிபதி 2015 இல் காணப்பட்ட பாதுகாப்பு திட்டங்களை முன்னைய அரசாங்கம் பின்பற்ற தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தற்போதைய அரசாங்கத்தையும் குற்றம்சாட்டவேண்டும் என தெரிவிக்கப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
தாக்குதலில் தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment