மயில் அழகுக்கலை நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது (படங்கள்) - Yarl Voice மயில் அழகுக்கலை நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது (படங்கள்) - Yarl Voice

மயில் அழகுக்கலை நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது (படங்கள்)மயில் அழகுக் கலை நிறுவனத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம் சிற்றி ஆங்கிலக் கல்லூரி மண்டபத்தில் மயில் அழகுக் கலை நிறுவனத்தின் பணிப்பாளர் லயன் பெண்மணி கயல்விழி றமேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் அழகுக் கலை பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

 மேலும் யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் சார்பில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

விருந்தினர்களாக இலங்கை 306 B1 மாவட்டத்தின் பிரதிப் பொருளாளர் லயன் Dr. S. பாலகுமார், ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் அதிபர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆளுநர் சபை உறுப்பினர் லயன் ஐங்கரன், மயில் புகைப்படக் கலையகத்தின் பணிப்பாளர் லயன் றமேஸ்குமார் மற்றும் ஏனைய லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post