காடழிப்புக்கு எதிராக செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம் - Yarl Voice காடழிப்புக்கு எதிராக செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம் - Yarl Voice

காடழிப்புக்கு எதிராக செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம்காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலைப் பாதுகாப்ப தற்காக விசேட பொறிமுறை யொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்ட மொன்றை முன்னெடுக் கவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, காடழிப்பு உட்பட சுற்றாடலுக்கு இழைக்கப்படும் தீங்குகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அதன்பின் புலத்தில் உள்ள அரசியல் கரங்களை அம்பலப்படுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் களான நளின் பண்டார, புத்திக பத்திரண, காவிந்த ஜயவர்தன, மயந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post