ஐடிஎச் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளர் அதிகரிப்பு;சித்திரை புத்தாண்டின் பின்னரே இந்த நிலைமை என சுட்டிக்காட்டு - Yarl Voice ஐடிஎச் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளர் அதிகரிப்பு;சித்திரை புத்தாண்டின் பின்னரே இந்த நிலைமை என சுட்டிக்காட்டு - Yarl Voice

ஐடிஎச் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளர் அதிகரிப்பு;சித்திரை புத்தாண்டின் பின்னரே இந்த நிலைமை என சுட்டிக்காட்டு
புதிய கொரோனா தொற்றாளர் சேர்க்கை காரணமாக ஐடிஎச் தொற்று நோய் வைத்தியசாலை தற்போது அதன் திறனை விட அதிகமாக செயலாற்றி வருவதாக அவ்வைத்தியசாலையின் பிரதிநிதி ஒருவர் இன்று தெரிவித்தார். 

இது 120 நோயாளிகளுக்கே  போதுமானது. ஆனால் தற்பொது 138 கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 8 படுக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. 
இதேவேளை சுமார் 20 சதவீத நோயாளிகட்கு ஒட்சிசன் வழங்கப்படுவதுடன் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சித்திரைப் புத்தாண்டின் பின்பே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கஜநாயக்க கொவிட் தொற்று அதிகரிப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், 

தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்றும் இதுபோன்ற சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post