யாழில் 239 பேர் அபிவிருத்தி உத்தியோத்தகர்களாக நியமனம் - Yarl Voice யாழில் 239 பேர் அபிவிருத்தி உத்தியோத்தகர்களாக நியமனம் - Yarl Voice

யாழில் 239 பேர் அபிவிருத்தி உத்தியோத்தகர்களாக நியமனம்2019 ஆம் ஆண்டு இரண்டாம், மூன்றாம் கட்டமாக பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக  நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

2019 ஆம் ஆண்டு இரண்டாம், மூன்றாம் கட்டமாக பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களில்  யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக  நியமிக்கப்பட்ட 239 பேருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (01) மாலை 3 மணிக்கு மாவட்ட செயலக
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் திரு.ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் கலந்து நியமன கடிதங்களை வழங்கி வைத்ததுடன், சிறப்புரையாற்றினர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர்  புதிதாக அரச சேவையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் பயிலுனர்களாக சேவையாற்றி பெற்ற அனுபவத்துடன் நிரந்தர நியமனம் பெற்றுக்கொண்ட இடங்களில் சிறப்பாக சேவையாற்ற வேண்டுமென தெரிவித்தார். யாழ் மாவட்டத்திற்கு நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்ட இடங்களுக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றுவதுடன்  தமது சேவையினை திறம்பட செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நியமனங்களை வழங்கி சிறப்பித்த அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பொதுமக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நீங்கள் அனைவரும் பொதுமக்களுக்கு சிறந்த தடையின்றிய சேவையை வழங்கல் வேண்டுமெனவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கான அனைவரதும் ஒன்றிணைந்த சேவையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினார். தெரிவித்தார்.

மேலும் சேவை வழிகாட்டி அறிவுரைகளையும், சிங்கள மற்றும் ஆங்கில மொழித் தேர்ச்சியின் முக்கியத்துவத்தையும் நியமனம் பெற்றவர்களுக்கு  தெளிவுபடுத்தினார்.

குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக
பிரதான உள்ளக கணக்காய்வாளர் ,
பிரதம கணக்காளர் , திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,மற்றும் புதிதாக  நியமனம் பெற்றவர்கள்  என பலரும் கலந்து கொண்ட னர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post