ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனை - Yarl Voice ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனை - Yarl Voice

ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனைஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மோதியது.

20 ஆவது ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். ஜடேஜா இந்த ஓவரை எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளையும் ஜடேஜா சிக்சருக்கு விளாசினார். 3 ஆவது பந்தை ஹர்சல் பட்டேல் முறையற்ற பந்தாக வீசினார். இந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். 

முறையற்ற பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் தொடர்ந்து நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 2 ஓட்டம் எடுத்த ஜடேஜா, கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் அடித்து இதன்மூலம் கிறிஸ் கெய்ல் ஓரே ஓவரில் 36 ஓட்டங்கள் என்ற சாதனையை சமன் செய்தார்.

இதேவேளை கிறிஸ் கெய்ல் அதிரடியால் ஆர்சிபி ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் எடுத்து ஒரே ஓவரில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது இந்த போட்டி மூலம் ஜடேஜா அதிரடியால் சென்னை ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post