ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்த எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஓய்ந்தது- இரங்கல் செய்தியில் சிறிதரன் எம்பி - Yarl Voice ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்த எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஓய்ந்தது- இரங்கல் செய்தியில் சிறிதரன் எம்பி - Yarl Voice

ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்த எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஓய்ந்தது- இரங்கல் செய்தியில் சிறிதரன் எம்பிஈழத் தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை 80 வயதில் இன்று காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்

ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு  வந்துவிடும்...

இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன்  நீங்கள் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது தன் ஓய்வு காலம் வரை தமிழ்த்தேசியத்திற்காய் குரல் கொடுத்தவர் 

எம் ஆயர் அவர்கள் மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்கள் 
யுத்த காலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை வழங்கியவர். தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.மனித உரிமை மீறல்களுக்காக போராடியவர். தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர் 

ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார் எம் ஆழ்ந்த இறங்கலை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

0/Post a Comment/Comments

Previous Post Next Post