ஊர்காவற்றுறை சுருவில் பிரதான வீதியில் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு அருகில் மதுபானசாலையை மீண்டும் திறக்க எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவக சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்களால் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமாகிய ஈஸ்வரபாதம் சரவணபவன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் தீவக சிவில் சமூக அமைப்புகளின் பொருளாளர் குணாளன் மாதர் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர் .
Post a Comment