கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த சுமந்திரன் எம்பியின் வாகனம் விபத்து..!!!! - Yarl Voice கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த சுமந்திரன் எம்பியின் வாகனம் விபத்து..!!!! - Yarl Voice

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த சுமந்திரன் எம்பியின் வாகனம் விபத்து..!!!!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வீதி விபத்தில் சிக்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியு ள்ளது.

சம்பவத்தில் வாகனம் மோசமாக சேதமடைந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

விபத்தில் மீள பயன்படுத்த முடியாதளவில் வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளது. எனினும், வாகனத்தில் பயணித்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

பொத்துவில தொடக்கம பொலிகண்டி வரை பேரணி தொடர்பாக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறும் வழக்கில் முன்னிலையாக பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்தது.

எவ்வாறாயினும், பின்னர் மாற்று வாகனம் ஒன்றில கல்முனை நோக்கி சுமந்திரன் பயணத்தை ஆரம்பித்தார.

எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் விபத்திற்குள்ளான பின்னர், பின்னால் வந்த வாகனமொன்றும் அதே இடத்தில் வழுக்கி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post