தம்பி மீது அண்ணண் கொலைவெறி தாக்குதல் - கோப்பாயில் சம்பவம் - Yarl Voice தம்பி மீது அண்ணண் கொலைவெறி தாக்குதல் - கோப்பாயில் சம்பவம் - Yarl Voice

தம்பி மீது அண்ணண் கொலைவெறி தாக்குதல் - கோப்பாயில் சம்பவம்
யாழ்.கோப்பாய் இராசபாதை வீதியில் அண்ணன், அண்ணன் மகன் இருவரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி தம்பியின் கை முறிந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.

அடி தாங்க முடியாமல் தம்பி கத்திக் கொண்டு தோட்ட வெளியில் ஓடியுள்ளார்.  தொடர்ந்து விரட்டி விரட்டி தம்பி என்று கூடப் பார்க்காமல் இருவரும் சேர்ந்து அடித்துள்ளனர்.அதனைப் பார்த்தவர்கள். அடிப்பதை நிறுத்துமாறும் கூறிய போதும் அவர்களின் சொல்லைக் கூட கருத்தில் எடுக்காமல் கைமுறியும் அளவுக்கு கோடரிப்பிடியால் அடித்துள்ளனர். 

மா.கந்தகுமார் (வயது 65) என்பவரே இருவரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி இடது கை முறிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தோட்ட வேலைகளில் ஈடுபடும் தம்பியை தனது தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமல்ல அதற்கான ஊதியத்தை தம்பிக்கு அண்ணன் வழங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. 

இதற்கு முன்னரும் இரு தடவைகள் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post