யாழ். கல்வி வலய கணக்கு கிளை உத்தியோகத்தருக்கும் கொரோனா- இழுத்து மூடப்பட்டது கணக்கு கிளை - Yarl Voice யாழ். கல்வி வலய கணக்கு கிளை உத்தியோகத்தருக்கும் கொரோனா- இழுத்து மூடப்பட்டது கணக்கு கிளை - Yarl Voice

யாழ். கல்வி வலய கணக்கு கிளை உத்தியோகத்தருக்கும் கொரோனா- இழுத்து மூடப்பட்டது கணக்கு கிளை
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கணக்கு கிளையில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கணக்கு கிளை 10 நாட்களிற்கு இழுத்து மூடப்பட்டது.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று முன் தினம் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வலயக் கல்வித் திணைக்களத்தின் நிதிப்பிரிவு முழுமையாக முடக்கப்பட்டது.

நிதிப் பிரிவில் பணியாற்றும் 17  உத்தியோகத்தர்களும் சுய  தனிமைப்படுத்தளிற்கு உட்படுத்தப்பட்டனர். திருநெல்வேலியைச் சேர்ந்த்உத்தியோகத்தரது மாமனாரிற்கு கடந்த வெள்ளிக் கிழமை பெற்ற மாதிரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து உத்தியோகத்தர் கடந்த சனிக் கிழமை முதல் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு புதன் கிழமை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உத்தியோகத்தருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம்  சுகாதார வைத்திய அதிகாரியின் பெயரில் 17 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 இவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனை எதிர் வரும் 2ஆம் திகதி மேற்கொண்டு அதற்கமைய முடிவுகள் எட்ணப்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post