கங்கணா ரணவத்தின் தலைவி… முதல் பாடல் நாளை ரிலீஸ் - Yarl Voice கங்கணா ரணவத்தின் தலைவி… முதல் பாடல் நாளை ரிலீஸ் - Yarl Voice

கங்கணா ரணவத்தின் தலைவி… முதல் பாடல் நாளை ரிலீஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்

இப்படம் ஏப்ரல் 23ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இப்புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக பரவி அரவிந்த்சாமி பார்ப்பதற்கு அச்சு அசல் எம்.ஜி.ஆர் போல இருக்கிறார் கூறப்பட்டது.

தலைவி படத்தின் டிரைலர் கங்கனா ரணவத்தின் பிறந்த நாளான நாள் மார்ச் 23ந் தேதி அன்று வெளியானது. அனல் பறக்கம் வசனத்துடன் தொடங்கிய இந்த டிரைலர் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும், இந்த காவியத் தலைவி வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தாக கங்கனா ரணாவத்தும் கூறியிருந்தார்

எம்.ஜிஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமியின் அருகில் கண்ணாடியுடன் சமுத்திரக்கனி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. இப்புகைப்படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான மழை மழை பாடல் நாளை வெளியாக உள்ளது. இப்பாடல் குறித்து கங்கனாவின் புகைப்படம் வெளியாகி உள்ளதால் பாடல் மீதான எதிர்பாப்பு ரசிகர்களுக்கு எகிறி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகள் ஏப்ரல் 23ந் தேதி வெளியாக உள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post