சிவஞானசோதியின் நினைவஞ்சலி யாழில் இடம்பெற்றது - Yarl Voice சிவஞானசோதியின் நினைவஞ்சலி யாழில் இடம்பெற்றது - Yarl Voice

சிவஞானசோதியின் நினைவஞ்சலி யாழில் இடம்பெற்றதுதேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர்  அமரர் வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த நினைவஞ்சலி நீகழ்வு யாழ் மக்களின் ஏற்பாட்டில் பிற்கபகல் 2.00மணியளவில் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,  முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  எல்.இளங்கோவன், துர்க்காதேவி தேவஸ்தான  தலைவர் கலாநிதி ஆறுமுகதிருகன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post