உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் - சபா குகதாஸ் கோரிக்கை - Yarl Voice உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் - சபா குகதாஸ் கோரிக்கை - Yarl Voice

உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் - சபா குகதாஸ் கோரிக்கை



உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இறக்குமதியான தேங்காய் எண்ணெய்யில் புற்று நோய்க்குரிய இராசயணப் பதார்த்தம்  உள்ளதாக வெளியான செய்தி மக்களிடையே பாரிய அச்சத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் உணவு தயாரிப்பில் பிராதான பொருள் தேங்காய் எண்ணெய்யாகும் அவ்வாறு இருக்கையில் நாடுமுழுவதும் உள்ள மக்கள் எண்ணெய்க் கொள்வனவில் பலத்த சந்தேகங்களை மனதளவில் உடையவர்களாக அச்சத்துடன் நின்மதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் பெரும்பாலான மக்கள் உணவுச் சாலைகளில் உணவினை பெற்று உண்பவர்களாக இருப்பதால் அவர்களும் பல குழப்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி யாரிடம் முறையிடுவது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையை உடனடியாக மாற்றி உணவுப் பொருட்களுக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சகல உணவுப் பொருட்களுக்குமான தர நிர்ணயம் மற்றும் சுகாதார உத்தரவாதம் போன்றவற்றை சுங்கப்பகுதியில் உறுதி செய்யக் கூடிய பக்கசார்பற்ற நிலையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட திணைக் களங்களும் உருவாக்க வேண்டும். 

தவறு நடைபெறுகின்ற போது சம்பந்தப்பட்ட தரப்பு யாராக இருந்தாலும் அதி உச்ச தண்டனையை சட்டத்தின் முன் வழங்க வேண்டும்.

 கொவிட் 19 ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வருமானங்கள் இல்லாமல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையில் அவலப்படும் போது அடிப்படை விடையங்களும் அரசிலாக்கப்படுமாக இருந்தால் நாடு அபாய நிலையை சென்றடையும். இதனை தவிர்க்க உடனடி நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post