மணிவண்ணன் கைது செய்யப்பட்டதற்கு மனோ கணேசன் கண்டனம் - - Yarl Voice மணிவண்ணன் கைது செய்யப்பட்டதற்கு மனோ கணேசன் கண்டனம் - - Yarl Voice

மணிவண்ணன் கைது செய்யப்பட்டதற்கு மனோ கணேசன் கண்டனம் -யாழ் மேயர் தம்பி மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை, தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையாக கண்டிக்கிறது. 

கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுனர் எடுத்து, நிதானமாக நடந்துக் கொண்டிருக்க வேண்டும்  

ஆனால் அவரது கைதை கண்டித்து, ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தனது முகத்தை  நிலைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன். 

இந்த கைது அரசாங்கத்தினரை மட்டுமல்ல, நம்மவர்கள் சிலபலரையும் திருப்தியடைய செய்திருக்கிறது என நான் அறிகிறேன். 

கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாக கூறுகிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post