மணிவண்ணனைச் சந்திக்க வவுனியாவில் கூடிய சட்டத்தரணிகள்! சட்டரீதியிலான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு! - Yarl Voice மணிவண்ணனைச் சந்திக்க வவுனியாவில் கூடிய சட்டத்தரணிகள்! சட்டரீதியிலான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு! - Yarl Voice

மணிவண்ணனைச் சந்திக்க வவுனியாவில் கூடிய சட்டத்தரணிகள்! சட்டரீதியிலான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு!யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்ட யாழ்.மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனை சந்திப்பதற்காக சட்டத்தரணிகள் பலர் வவுனியாவில் கூடியிருப்பதாக தெரியவருகிறது.

இருந்தபோதிலும் அவர்களுக்குச் சட்டரீதியில் மணிவண்ணனை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் இருந்தபோதிலும் மணிவண்ணனை சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்து சட்டத்தரணிகள் காத்திருப்பதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டிலேயே மணிவண்ணன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post